தீர்வு தராத தமிழக அரசு... மொத்த கிராமத்தையும் காலி செய்து ஆந்திரா செல்லும் தமிழக மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராமங்களை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நெல்வாய், தண்டலம், மாதாபுரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேளிரி, நெல்வாய், தண்டலம், மாதபுரம், நாகப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள், விவசாய நிலங்கள் மட்டுமின்றி, குடியிருப்புக்களையும் அகற்றி வருகின்றனர். இதனால் பரந்தூர் பசுமை சர்வதேச விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இரவு பகலாக விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஒன்றாக அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராம மக்களின் போராட்டம் 690வது நாளை எட்டியுள்ளது. இதற்காக விமான நிலையம் தேவையில்லை என கிராமசபை கூட்டங்களில் கிராம மக்கள் தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதையடுத்து, கிராமசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை இல்லாததால், கிராமசபையை புறக்கணிப்பதிலும் ஈடுபட்டனர். இதேபோல், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலை புறக்கணித்தும் ஏகனாபுரம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
கிராம மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த அக்டோபரில், விமான நிலைய திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் 3 துணை ஆட்சியர்களும், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள் உள்பட 324 பேரும் நியமிக்கப்பட்டு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, முதற்கட்டமாக போடவூர், மகாதேவி மங்கலம், சிறுவலூர், பரந்தூர் ஆகிய கிராமங்களில் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள். ஆட்சேபனை உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், புதிய பசுமை விமான நிலையத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, உதியார்பாக்கம் பகுதியில் சுமார் 59.75 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், நிலம் அபகரிப்பு குறித்து தொடர்ந்து செய்திகள் வருவதால், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, வரும் 24-ம் தேதி திங்கட்கிழமை கிராம மக்களின் போராட்டம் 700-வது நாளை எட்ட உள்ள நிலையில், ஆந்திராவில் தஞ்சம் அடைய சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த முடிவால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான கூட்டு இயக்கமும், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நலச் சங்கமும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நில அபகரிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தமிழக அரசை கண்டித்து, விவசாயிகள் வாழ தகுதியில்லாத தமிழகத்தை விட்டு வெளியேறுவதில் பெருமிதம் கொள்கிறோம். எனவே, ஒட்டு மொத்த சாமானிய மக்களும் சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்வதை விட, மொழி தெரியாத அந்நிய மாநிலமான ஆந்திராவில் அடிமைகளாக வாழ முடிவு செய்துள்ளனர். எனவே, ஆந்திர மாநிலத்தில் அடைக்கலம் கோரி சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கப் போகிறோம் என்கின்றனர் போராட்டக்குழு இயக்கம். இதன் விளைவு என்ன என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
