உஷார்... இவங்களின் ரேஷன் கார்டுகள் ரத்து.. விரைவில் அமல்!

 
ரேஷன்

 இந்தியா முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில் ரேசன் கார்டு வைத்திருக்கும் தகுதி இல்லாதவர்களின் பட்டியல் தயாராகி வருகிறது.  இந்தியா முழுவதும் 2017 முதல் 2021 வரை  மொத்தம் 3 கோடியே 41 லட்சம் நகல் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரேஷன்

குறிப்பாக பீகாரில் மட்டும் 10,000 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.  இதேபோன்று உத்திரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி இல்லாத நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலின் படி விரைவில் அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை  வெளியாகவில்லை. மேலும் தமிழ்நாட்டில் இதுபோன்ற விதிமுறைகள் அமலில் இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web