குட் நியூஸ்... நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!

தமிழ்நாடு முழுவதும் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உட்பட பல பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டத்தை சோதனை ரீதியாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தனியாக வசித்து வரும் முதியோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!