பிரபல கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு?... ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் திடீரென அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.இத்தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Ravichandran Ashwin announces his retirement from all forms of international cricket.
— 7Cricket (@7Cricket) December 18, 2024
Congratulations on a brilliant career 👏 pic.twitter.com/UHWAFmMwC0
தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உட்பட 3,506 ரன்கள் குவித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் இந்திய அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தபோது சதம் விளாசி அணியைக் காப்பாற்றினார். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!