ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேவில் இருந்து விலகல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சிஎஸ்கே அணியில் நீண்ட காலமாக விளையாடி வந்த நட்சத்திர ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இப்போது சென்னை அணியிலிருந்து விலகி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மினி ஏலத்துக்கு முன்பாகவே ஜடேஜாவின் மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, இது ஐபிஎல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
200 Matches
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2025
2354 Runs
152 wickets
94 catches
When history speaks of courage in Yellove,
it will echo your name. 💛⚔️
Thank You, Ravindra Jadeja! 🫡#WhistlePodu #ThalapathyForever pic.twitter.com/WNMlgSOIgD
2011 முதல் சிஎஸ்கேவை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஜடேஜா இதுவரை 200 போட்டிகளில் கலந்து கொண்டு 2,354 ரன்கள் குவித்ததுடன், 152 விக்கெட்டுகள் வீழ்த்தியும், 94 கேட்சுகளைப் பிடித்தும் அணிக்கு பல்வேறு தருணங்களில் பெரும் தாங்காக இருந்தார். குறிப்பாக கடந்த சீசனில் சிஎஸ்கே கோப்பையை எடுக்க அவர் ஆடிய முடிவு முக்கிய பங்கு வகித்தது. இதனால் அவரது மாற்றம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகியுள்ளது.
இதற்கிடையில், ஜடேஜாவை நினைவுகூறும் விதமாக சிஎஸ்கே தனது சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு விடியோவை வெளியிட்டது. "மஞ்சள் நிறத்தில் தைரியத்தின் வரலாறு பேசும் போது, உன் பெயரே எதிரொலிக்கும். நன்றி, ரவீந்திர ஜடேஜா" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு சிஎஸ்கே ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
