முடிவுக்கு வந்த 32 வருட வாழ்க்கை .. மனைவியை பிரியும் ரேமண்ட் நிறுவனத் தலைவர் !!

 
ரேமண்ட்

ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்  கௌதம் சிங்கானியார். இவரே  நிர்வாக இயக்குநரும் கூட இவர் தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். இதனால் 32 வருட வாழ்க்கை முடிவுக்குவந்தது. இவர் தனது மனைவிக்கு தீபாவளி விருந்தில்  கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். தீபாவளியை முன்னிட்டு தனது நண்பர்கள், தொழிலதிபர்களுக்கு விருந்து வைத்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ள மனைவிக்கு அழைப்பு இல்லை.   தானேயில் உள்ள கவுதம் சிங்கானியாவுக்கு சொத்தான ஜேகே கிராமில் தீபாவளி விருந்து வழங்கப்பட்டது.


 


அதில், கலந்து கொள்ள அவரது மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விருந்துக்கான அழைப்பிதழ் இருந்தும் பாதுகாவலர்கள் தன்னை உள்ளே விட அனுமதி மறுத்து விட்டனர் என அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.  அவரும் மற்றொரு பெண்ணும் விருந்து நடைபெற்ற வளாகத்தின் வாசற்கதவருகே நின்று கொண்டிருந்தனர்.இந்த  வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், உள்ளே செல்ல வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் சுமார் 3 மணி நேரம் தனது காரில் காத்திருந்ததாக அவர் கூறுகிறார்.   இதுகுறித்து சிங்கானியா  “  நானும் நவாஸும் வெவ்வேறு பாதைகளில் செல்வோம் என்பது எனது நம்பிக்கை. 32 வருடங்கள்  ஒன்றாக வாழ்ந்து, பெற்றோராக வளர்ந்து, எப்போதும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருந்துள்ளோம்.

ரேமண்ட்

அர்ப்பணிப்பு, உறுதி, நம்பிக்கையுடன் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். சமீப காலங்களில் விரும்பத்தகாத பல  விஷயங்கள் நடந்து வருகின்றன.  ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகின்றன, எங்கள் வாழ்க்கையைச் சுற்றியுள்ள கிசுகிசுக்கள் நலன் விரும்பாதவர்களால் தூண்டப்படுகின்றன.” என பதிவிட்டுள்ளார்.எங்களின் மகள்களான  நிஹாரிகா மற்றும் நிசாவுக்கு தேவையானதை செய்து கொண்டே  நான் எனது மனைவியை பிரிகிறேன் என தெரிவித்துள்ளார்.   தனது தனிப்பட்ட முடிவுகளுக்கு மரியாதை அளித்து யாரும் தொந்திரவு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இவர்களது திருமணம் 1999ல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web