நீட் எழுதிய 120 மாணவர்களுக்கு மறுதேர்வு!

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 -2025-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு மே 5ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் 23,00,000 மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.இந்நிலையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தாக சமூக வலைத்தளங்களில் காட்டூத்தீ போல் தகவல் பரவியது. இதனால் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாக மாணவர்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீட் நுழைவு தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில், 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குனர் சாதனா பராசர் “ நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தது என்ற தகவலில் சிறிதளவு கூட உண்மையில்லை. ராஜஸ்தானில் உள்ள ஸ்வாய் மதோபோரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில் தேர்வர்கள் வினாத்தாளுடன் தேர்வு அறையை விட்டு வெளியே வந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தானில் குறிப்பிட்ட அந்த தேர்வு மையத்தில், தாங்கள் தேர்வு செய்த மீடியத்திற்கு பதிலாக வேறு மொழியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே மாணவர்கள் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டமர். ராஜஸ்தானில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது. தேர்வர்கள் அறையை விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தேர்வர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், தேசிய தேர்வு முகமை உறுதியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!