விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை... தமிழக தலைமை தேர்தல் ஆணையர்!

 
சத்ய பிரதா சாகு

 மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்து வந்ததை அறிய முடிந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும் அதிகாரிகளே சொல்கின்றனர்.   

பிரேமலதா
பிரேமலதாவின் குற்றச்சாட்டு குறித்து  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, “தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு பெறலாம். விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். எனினும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது குறித்து இதுவரை தேமுதிக எந்தப் புகாரும் அளிக்கவில்லை “ எனக் கூறியுள்ளார்.  
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் முதல் முறையாக வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்ட நிலையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜயபிரபாகரனை தோற்கடித்ததாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web