நேற்று ஜியோ... இன்று ஏர்டெல்... ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

 
ஜியோ ஏர்டெல்

  
உலகம் முழுவதும் இன்று அனைவரது கையிலும்  ஆறாம் விரலாய் செல்போன்கள்  6 மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை முளைத்துவிட்டன. செல்போன்கள் இல்லாத ஒரு வாழ்வே இனி இல்லை என்றாகி விட்டது. செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அந்த வகையில் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இத்தகவலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

ரிசார்ஜ்

அதன்படி, 11 சதவீதம் முதல் 21 சதவீதம் வரையில் இந்த விலையேற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு  ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. வாய்ஸ் கால் ரீசார்ஜ் ஒரு மாதத்திற்கு ரூ.179 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக்  கட்டணமானது, ரூ.199ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான 1.5 ஜி.பி. ரீசார்ஜ் கட்டணம் ரூ.719லிருந்து  ரூ.859ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.2999 லிருந்து  ரூ.3599ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

ரிசார்ஜ்

கூடுதல் 1 ஜிபி கட்டணம் 19லிருந்து  22ஆகவும்,   2 ஜிபிக்கான கட்டணம் 29 லிருந்து  33ஆகவும்,  4ஜிபிக்கான கட்டணம் 65 லிருந்து   77ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல மற்ற ரீசார்ஜ் பிளான்களிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web