அதிர்ச்சி... 3,000க்கும் மேற்பட்ட இளம்பெண்கள்...5000 இந்தியர்கள்... கம்போடியாவுக்கு கடத்தல்; மீட்கப்பட்ட ஐ.டி. ஊழியர் தகவல்!

 
ஐடி
 


அதிர்ச்சியளிக்கும் விதமாக 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 5,000க்கும் அதிகமான இந்தியர்களை கம்போடியாவுக்கு சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் கடத்தி சென்று, அடிமையாக வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கம்போடியாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்ட ஐ.டி. இன்ஜினீயர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி இன்ஜினீயர் முன்ஷி பிரகாஷ் கூறுகையில், “ பி.டெக் பட்டதாரியான நான் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக தகவல்களைப் பதிவு செய்து வைத்திருந்தேன். இந்நிலையில் கம்போடியாவில் இருந்து விஜய் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறினார். இதற்காக மலேசியாவுக்கு வருமாறு கூறி அதற்கான டிக்கெட்களையும் அனுப்பி வைத்திருந்தார். 

ஐடி


ஆஸ்திரேலியாவில் வேலை என்று சந்தோஷமாக பெற்றோர்களிடமும், உறவினர்களிடம் சொல்லி விட்டு கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து கோலாலம்பூர் சென்றேன். அங்கிருந்து கம்போடியாவுக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். 
கம்போடியா சென்றதும் அங்கு வந்த சீன கும்பல் என்னுடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து கொண்டு, என்னை கிராங்பாவெட் நகருக்கு கடத்திச் சென்றனர். வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு ஆட்களை கடத்தும் கும்பலிடம் சிக்கியது அப்போது தான் தெரிந்தது. அங்கு போலியாக பெண்களின் பெயர்களில் சமூக வலைதளப்பக்கங்களை உருவாக்க எங்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. தெலுங்கு உள்ளிட்ட இதர இந்திய மொழிகளில் இந்த போலி பக்கங்களை உருவாக்க பயிற்சி தரப்பட்டது. தொடர்ந்து என்னை சித்தரவதை செய்தனர்.

க்ம்போடியா


எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை குறித்து ஒரு செல்ஃபி வீடியோ எடுத்து தமிழகத்தில் உள்ள எனது சகோதரிக்கு இ -மெயில் அனுப்பினேன். எனது சகோதரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தந்ததன் மூலம் நான் தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டேன்.
கடத்தல்காரர்களிடம் இருந்து நான் மீட்கப்பட்டபோதும், கம்போடிய போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து 12 நாட்கள் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் போலி வழக்கு என தெரிந்து என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். 
5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கம்போடியாவில் அடிமைகளாக சிறைபட்டுள்ளனர். இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகளும் அடங்குவர். அங்கு தனி அறைகளில் அடைத்து வைத்து அவர்களை நிர்வாணமாக வீடியோ கால்கள் செய்யுமாறும், வாடிக்கையாளர்களை ஏமாற்ற நிர்வாணமாக வீடியோ கால்களில் பேசுமாறும் இந்திய பெண்களையும், சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி மிரட்டி பணம் பறிக்கின்றனர்” என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web