ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்... கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி, 22 பேர் படுகாயம்!

 
கூட்டநெரிசல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கானா தலைநகர் அக்ராவில் உள்ள எல்-வாக் விளையாட்டு அரங்கில் நேற்று ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்புக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த முகாமில் பங்கேற்க அரங்கில் திரண்டனர். ஒரே நேரத்தில் பலர் நுழைய முயன்றதால் திடீரென மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பள்ளி மானவி தற்கொலை

இதில் சிக்கி 6 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலை

கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு கானா அதிபர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும், ஒரு சில ஆள் சேர்ப்பு முகாம்களுக்கே பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் திரளுவதாலும் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எதிர்கால ஆள் சேர்ப்பு முகாம்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!