7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.... வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

 
தமிழகம்

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி  மற்றும் கடலோர மாவட்டங்களில்  நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை காலை முதலே மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

ரெட்

இந்நிலையில் 7 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்றைய மழைப்பொழிவு குறித்து வானிலை ஆய்வுமையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.  

ரெட், ஆரஞ்சு, மஞ்சள்

தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web