இன்றும் தலைநகருக்கு ரெட் அலெர்ட்... திணறடிக்கும் மழை!
தலைநகர் டெல்லியில் பெரும்கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு முதல் தலைநகரில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம் பெரும்பாலான பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக், கித்வாய் நகரில் தண்ணீர் தேங்கியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை சனிக்கிழமை காலை வரை நீடித்தது.

இந்நிலையில், வடக்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய தில்லி என பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில், மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
