கொட்டித் தீர்த்த கனமழை.. நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

 
கனமழை


 
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில்  தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சாலைகள் வெள்ளக் காடாகின. இந்நிலையில்  மும்பை, தாணே மற்றும் ராய்கர்   மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான ரெட் அலெர்ட்  விடுக்கப்பட்டுள்ளது.  மணிக்கு  40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை படகு விபத்து


நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கோகலே பாலம் வழியாகப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் புணேவில் கனமழை பெய்து கொண்டுள்ளது. நாளை, செப்டம்பர் 16ம் தேதி  கொங்கண், கோவா, மத்திய மகாராஷ்டிரம் மற்றும் மராத்வாடாவில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை
வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  திங்கட்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையின் வடலா பகுதியில் மோனோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.  அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு மற்றொரு மோனோ ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டதாக மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?