ரீல்ஸ் மோகத்தில் கடலில் பாய்ந்த ஜீப்....வைரல் வீடியோ!

 
கடலில் கார்


இன்றைய வாழ்க்கை முறையில்  சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற விபரீத விளையாட்டுக்கள் சாகசங்களில் ஈடுபடுகின்றனர். பல நேரங்களில் இவை ஆபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன. இருந்தாலும் இளசுகள் இதனை விடுவதாயில்லை. இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. சமீபத்தில் இளம்பெண் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நிலையில் அந்த இளம் பெண் உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் கட்ச் கடற்கரையில் சில இளைஞர்கள்  ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக விலை உயர்ந்த மகேந்திரா ஜீப் வாகனங்களை கொண்டு சென்றனர். அப்போது இரு வாகனங்களும் திடீரென கடலில் சிக்கிக்கொண்டது. அந்த இளைஞர்கள்  ஜீப்பில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கடலில் இருந்து ஜீப்கள் மீட்கப்பட்டது.

ஜீப் மீட்கப்பட்டாலும் கார் எஞ்சின் உள்ளே கடல் நீர் புகுந்துவிட்டதால் பழுதாகிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இருவர் மீதும்  வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web