ரீல்ஸ் மோகம்... வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி... கதறிய பெற்றோர்... பொள்ளாச்சியில் மீட்ட போலீசார்!

ரீல்ஸ் மோகத்தில் சதா சர்வ காலமும், செல்போனும் கையுமாக கோடை விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்ததால், தாய் திட்டியதில், கோவை அருகே ஒண்டிப்புதூரில் இருந்து 12 வயது சிறுமி, வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசில் புகார் அளித்தனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமியை போலீசார் பொள்ளாச்சியில் கண்டுப்பிடித்ஹ்டு, பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஶ்ரீநிதி(12) பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இப்போது கோடை விடுமுறை என்பதால் சிறுமி எப்போதும் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்ரீநிதியின் தாயார் திட்டியுள்ளார்.
இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற ஶ்ரீநிதி மாயமானதாகக் கூறப்படுகிறது. சிறுமி மாயமானது தெரிந்ததும், அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காத நிலையில், சிறுமியின் பெற்றோர் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாணவி ஶ்ரீநிதியைக் காணவில்லை என்றும் அவரை கண்டுபிடிப்போர் தகவல் அளிக்கலாம் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், முதலில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
மேலும், அங்கே இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர். சிறுமி குறித்து தகவல் கிடைத்தால், போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், அந்த சிறுமியைப் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கண்டுபிடித்தனர்.
கிழக்கு அனைத்து மகளிர் போலீசார், இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து 6 தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில் சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியை மீட்ட போலீசார், கோவை அழைத்து வந்தனர். வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர் புகார் அளித்து சில மணி நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு சிறுமியை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!