சிகரெட் வாங்க பணம் தர மறுப்பு.. ஆத்திரத்தில் பெற்ற தந்தையே கொடூரமாக கொன்ற மகன் கைது!

 
கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்தவர் கணேசன் (60), விவசாயி. இவரது மூத்த மகன் வினோத்குமார் (35) சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பிய அவர், சிங்கப்பூர் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை வினோத்குமார் தனது தந்தை கணேசனிடம் சிகரெட் வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால், கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் அங்குள்ள கடைக்கு சென்று சிகரெட் கடனாக கேட்டுள்ளார். கடைக்காரரும் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் வீடு திரும்பிய வினோத்குமார் தந்தையிடம் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை கணேசனின் தலையில் தாக்கினார். இதில் கணேசன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வினோத்குமார் அங்கிருந்து ஓடினார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அன்னவாசல் போலீஸார், கணேசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொன்றுவிட்டு தப்பியோடிய வினோத்குமாரை தேடி வந்தனர். அங்குள்ள கிணற்றில் வினோத்குமார் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பின், அங்கு சென்று பார்த்தபோது, வினோத்குமார், கிணற்றுக்குள் பைப் பிடித்து பதுங்கியிருந்தார். அவரை பார்த்த போலீசார் தீயணைப்பு துறையினரை அழைத்து அவர்கள் உதவியுடன் வினோத்குமாரை அழைத்து வந்து கைது செய்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web