செப்.1ம் தேதி முதல் பதிவு தபால் முறை ரத்து? அஞ்சல்துறை விளக்கம்!

 
இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

செப்.1ம் தேதி முதல் பதிவு தபால் முறை ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு அஞ்சல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் கடிதங்கள் எழுதுவது, தபால் அனுப்புவது உள்ளிட்டவை எல்லாம் படிப்படியாக மறைந்து விட்டன. இருந்தபோதும், ஆவணங்கள் உள்ளிட்டவை இன்னமும் பதிவு தபால்கள் மூலம் தான் அனுப்பப்பட்டு வருகின்றன. ரிஜிஸ்டர்டு போஸ்ட் எனப்படும் பதிவு தபால்கள் தான் ஆவணங்களை அனுப்ப நம்பகத்தன்மை வாய்ந்தது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்கள் மத்தியில் நீடிக்கிறது. 

போஸ்ட் ஆபீஸ் தபால் நிலையம்

இந்நிலையில் தான் பதிவு தபால் சேவை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு இந்திய தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. இதன்படி பதிவு தபால் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது என்ற செய்தி தவறானது. பதிவு தபால் சேவையை இன்னும் மேம்படுத்துவதற்காக அதனை ஸ்பீடு போஸ்ட் எனப்படும் விரைவு தபால் தேவையுடன் இணைக்கிறோம் என தெரிவித்திருக்கிறது. 

தபால் துறை உள்கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது என விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தான் பதிவு தபாலையும் விரைவு தபாலையும் ஒன்றிணைத்திருக்கிறோம் எனக் கூறியிருக்கிறது. விரைவு தபாலுடன் பதிவு தபாலை ஒருங்கிணைப்பதன் மூலம் பதிவு தபாலின் நம்பகத்தன்மையை காக்கும் அதே வேளையில் விரைவு தபாலில் கிடைக்கும் வேகமான டெலிவரி, ஆன்லைன் டிராக்கிங் வசதிகள் பதிவு தபாலுக்கும் கிடைக்கும் என விளக்கம் தரப்பட்டுள்ளது. 

அஞ்சலகம் தபால் போஸ்ட் ஆபீஸ்

பதிவு தபாலை ஸ்பீட் போஸ்ட் முறையோடு இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அதனை டிராக் செய்து கொள்ள முடியும், ரியல் டைம் டெலிவரி அப்டேட்டுகளை பார்த்துக்கொள்ள முடியும், ஓடிபி அடிப்படையிலான பாதுகாப்பான டெலிவரி சேவையை பெற முடியும். தபால் துறை, பதிவு தபால் நீக்கப்படவில்லை மேம்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சல் அட்டை, தபால் பெட்டி போன்றவை வழக்கம் போல உள்ளது என்று அஞ்சல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?