சர்ர்..ரெலேன நாடு முழுவதும் குறைய துவங்கியது உளுந்தம் பருப்பு விலை... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
உளுந்து
 

விண்ணை முட்டும் அளவுக்கு பருப்புகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் சர்ர்..ரெலென உளுந்தம் பருப்பு விலை நாடு முழுவதும் மத்திய நுகர்வோர் நலத்துறை மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக குறைய துவங்கியிருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
தமிழகம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உளுந்து சாகுபடி பரப்பை  இந்த முறை விவசாயிகள் அதிகரித்துள்ளனர்.

உளுந்து


கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, உளுந்து சாகுபடிக்கான நிலப்பரப்பு 5.37 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உளுந்து சாகுப்படிக்கான நிலப்பரப்பளவு 3.67 லட்சம் ஹெக்டேர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக பரப்பளவில் இந்த முறை சாகுப்படி செய்யப்படுவதால் மத்திய அரசின் கொள்முதல்  முகமைகளில் பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

உளுந்து


மத்தியப்பிரதேசத்தில் மட்டும் உளுந்து பயிரிடும் 8, 487 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 1611, 2037, 1663 விவசாயிகள் முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தூர், டெல்லி சந்தைகளில் 2024 ஜூலை 6 நிலவரப்படி, உளுந்தின் மொத்தவிலை முந்தைய வாரத்தைவிட, முறையே 3.1 சதவீதமும், 1.08 சதவீதமும் குறைந்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web