நடிகர் அஜித்தின் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமம் ஒப்பந்தம்!

 
அஜித்

தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமம் இணைந்துள்ளது. இதனால், இந்திய மோட்டார் விளையாட்டு உலகில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பதுடன், கார்பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர் அஜித் குமார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பின் ரேஸிங் துறையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான ‘அஜித் குமார் ரேஸிங்’ மூலம் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

அஜித்

துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் அவர் மற்றும் அவரது அணி சிறப்பாக பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் ‘கேம்பா’ எனர்ஜி டிரிங்க் பிராண்ட், அஜித் குமார் ரேஸிங் அணியுடன் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக ஒப்பந்தம் செய்துள்ளது.

அஜித்

இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா முழுவதும் மோட்டார் விளையாட்டில் புதிய உந்துதலை உருவாக்கி வரும் மிக நம்பத்தகுந்த அணிகளில் ஒன்றாக அஜித் குமார் ரேஸிங் உள்ளது. இதனுடன் இணைவதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. அஜித் குமார் ரேஸிங் அணி தற்போது 2026 ஐரோப்பிய கார் ரேஸிங் சீசனுக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!