சேற்றில் நடக்க தயக்கம்.. தீயணைப்பு வீரர் தோளில் ஏறிய பாஜக மூத்த தலைவர்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

குஜராத் மாநிலம், சூரத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சூரத் துணை மேயர் மற்றும் பா.ஜ.க.வினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளனர்.சூரத் நகர துணை மேயரும், பாஜக தலைவர்களில் ஒருவரான நரேந்திர பாட்டீல் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் சென்ற பகுதி சேறும் சகதியுமாக இருந்தது. சேற்றில் இறங்கி விசாரித்தால் உடைகள், காலணிகள் சேதமாகிவிடும் என எண்ணி அருகில் இருந்த தீயணைப்பு வீரரை அழைத்து அவரது தோளில் ஏறி கொண்டார்.
இதையடுத்து துணை மேயர் நரேந்திர பாட்டீலை தீயணைப்பு வீரர் தோளில் சுமந்து சென்றார். இதனை மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சூரத் துணை மேயரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறியதாவது: வெள்ளம் பாதித்த பகுதிகளை துணை மேயர் பார்வையிட்டார். அப்போது கட்டிடத்தில் 35 அடி ஆழத்தில் வெள்ளத்தில் சிக்கியவரின் உடலை வெளியே கொண்டு வரும் பணி நடந்து வந்தது. அப்போது, துணை மேயர் நரேந்திர பாட்டீல் பல மணி நேரம் நின்று பணிகளை ஆய்வு செய்ய நேரிட்டதால், காலில் அசௌகரியம் ஏற்பட்டது. கால்கள் மிகவும் வலித்ததால், சேறும் சகதியுமான பகுதியைக் கடக்க என் தோளைப் பயன்படுத்தினார். சூரத் தீயணைப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு உதவ ஒருபோதும் தயங்க மாட்டார்கள். அது பெரிய பிரச்சனை இல்லை என்றார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!