மேற்கு வங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு... 2 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வம்!

 
மேற்கு வங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு... 2 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வம்!


நாடு முழுவதும் நாளை வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பராசத், மதுராபூர் மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. 

மேற்கு வங்க மாநிலம், பராசத் தொகுதியில் உள்ள தேகங்கா சட்டப் பேரவை தொகுக்கு உட்பட்ட கடம்பகாச்சி சாரதார் பாரா எஃப்பி பள்ளியில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் இன்று மறுதேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு... 2 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வம்!

இதே போல், மதுராப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள காக்த்விப் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆதிர் மஹால் ஸ்ரீ சைதன்யா பித்யாபித் வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மறு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு வாக்குச் சாவடிகளில் கடந்த 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இங்கு ஏற்பட்ட வன்முறை காரணமாக இரண்டு வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web