#TRAIN ACCIDENT: தொடர் மழையால் மீட்பு பணி பாதிப்பு... அதிதிறன் கொண்ட'மாமல்லன்' கிரேன் வரவழைப்பு!
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நேற்றிரவு நடந்த ரயில் விபத்தில் 12 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் இன்று அதிகாலை மாற்று ரயிலில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரயில் விபத்து நிகழ்ந்து 12 மணி நேரமாகியும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலானதாகவும், தாமதமும் ஏற்படுகிறது.

ரயில் விபத்துக் குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்பு பணிகள் தாமதமாகி வருவதால் மீட்பு பணிகளில் ஈடுபட அதிக திறன் கொண்ட 'மாமல்லன்’ கிரேன் வரவழைக்கப்பட்டுள்ளது. புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
