நெகிழ்ச்சி!! நடுரோட்டில் நின்று கதறிய மாணவி!! சைரன் வாகனத்தில் தேர்வு மையத்தில் விட்ட போலீசார்!!

 
ஆனந்தி

நீட் தேர்வுகள் நேற்று முன் தினம் மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தேர்வு மையத்தை மாற்றி சென்ற ஒரு மாணவி நடுரோட்டில் கதறி அழுதார். ஆனால் அந்த நேரத்தில் கடவுளை போல் வந்து காவல்துறை அந்த பெண்ணுக்கு உதவி செய்து தேர்வு எழுத வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக, மாணவியின் பெற்றோர் காவலர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். திருத்தணியில் வசித்து வருபவர் 50 வயது  விநாயகம். இவருடைய மகள் 18 வயது ஆனந்தி, இவர்  நீட் தேர்வுக்காக  தன்னை தயார்படுத்தி இருந்தார். தேர்வுக்காக திருத்தணியில் இருந்து மின்சார ரயில் மூலம் மாணவி பெற்றோருடன் ஆவடி வந்து சேர்ந்தார். 

நீட் நுழைவுத்  தேர்வு


ஆவடியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி தேர்வு மையத்திற்கு பிற்பகல்  1.48 மணி அளவில் சென்றுள்ளார். ஆனால், திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள விவேகானந்தா பள்ளி மையம் அவருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர் தேர்வு மைய வாசலில் நின்று கதறி அழுது கொண்டிருந்தார்.  தேர்வு எழுத தவறான இடத்திற்கு வந்து விட்டதை எண்ணி நெடுஞ்சாலையில் நின்ற அவர் பெற்றோரிடம் கூறியபடி கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது, மாணவியின்  அழுகையை பார்த்த போக்குவரத்து போலீசார், எதற்காக அழுதுகிறீர்கள் என  கேட்டுள்ளனர். ‘தேர்வு எழுத இன்னும் 12 நிமிடம் தான் உள்ளது. தேர்வு மையம் திருமுல்லைவாயலில் உள்ளது. நான் எப்படி தேர்வு எழுத முடியும்?’ என  கூறியபடி மாணவி கதறி அழுதுள்ளார். இதனை கண்ட போக்குவரத்து காவலர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் நிறுத்தவில்லை.

நீட் தேர்வு

அதற்காக அவர்கள்  மாணவி, பெற்றோர்களை  உடனடியாக  தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சைரன் சத்தத்துடன் 7 கிமீ தூரத்தில் அமைந்துள்ள திருமுல்லைவாயல் பள்ளி மையத்திற்கு 10 நிமிடத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றனர். திருமுல்லைவாயல் விவேகானந்தா பள்ளியில் மாணவி மற்றும் பெற்றோரை இறக்கிவிட்டனர்.  கீழே இறக்கிவிட்டு சாலையை கடந்து செல்லவும் உதவி செய்தனர். மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க போக்குவரத்து தலைமை காவலர் தனசேகர் மற்றும் தினேஷ்குமார் சாமி இருவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். சரியான நேரத்தில் மாணவியை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்ற போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் மட்டுமின்றி  போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், இணை கமிஷனர் விஜயகுமாரும்  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web