மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனிதர்களாக்கும் நெகிழ்ச்சி செயல்.. இளைஞருக்கு குவியும் பாராட்டு!
நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆதரவின்றி சாலையோரம் திரியும் ஆதரவற்ற இளைஞர்கள், முதியோர்களுக்கு பாரதிமோகன் அறக்கட்டளை என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு வழங்கி வருகிறார் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பாரதிமோகன்.
மேலும், தெருவில் அலையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று, முடி வெட்டி, குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, சக மனிதனாக மாற்றி, தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்று, மறுவாழ்க்கை வழங்குகிறார். அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி கோயில் மற்றும் நாகூர் தர்காவில் சுற்றித் திரியும் ஆதரவற்ற, மனவளர்ச்சி குன்றிய 50க்கும் மேற்பட்டோருக்கு பாரதிமோகன் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் முகச்சவாராம் செய்தார்.
தொடர்ந்து அவர்களைக் குளிப்பாட்டி, அவர்களுக்குப் புதிய ஆடைகள் மற்றும் உணவுகளை அளித்து, ஆதரவற்றோர் தங்குமிடத்தில் ஒப்படைத்தார். சாலைகளில் நடமாடுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த 50க்கும் மேற்பட்டோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து மறுவாழ்வு அளித்த தன்னார்வலர் பாரதி மோகனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!