உஷார்... இன்று முதல் அமலுக்கு வந்தது... வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு!
இன்று காலை முதல், தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.அரசால் அங்கீகரிக்காத அடையாள ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியிருந்தால் அகற்றி விட வேண்டும். தனிநபர் வாகனங்களில் இனி அரசு அங்கீகரிக்காத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதற்கட்டமாக காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டி உள்ள வாகனங்களை நிறுத்தி சோதனையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், வாகன நம்பர் பிளேட்களில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.

ப்ரஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலும் அபராதம் விதிக்கப்படும். பத்திரிக்கையாளர்கள் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளலாம். வாகன உரிமையாளர், அரசு அங்கீகாரம் செய்த செய்தி நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். யூ -ட்யூப்களில் வீடியோ வெளியிடுபார்கள் பிரஸ் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறொருவர் பெயரில் அடையாள அட்டை வைத்திருந்து ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் முதல் முறை ரூ.500 அபராதமும், ரண்டாவது முறை ரூ.1,500 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
