பழிக்கு பழி வாங்க வெறிச்செயல்.. பெண்ணின் மீது வெடிகுண்டு வீசிய மூவருக்கு வலைவீச்சு!

 
சந்தோஷ் - மனோஜ்குமா

சென்னை டி.பி.சத்திரம் 9வது தெருவைச் சேர்ந்த அமுதா (29) என்பவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ஜன்னல் மீது பெட்ரோல் குண்டை வீசினர்.  அமுதா மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு தவறி வேறு இடத்தில் விழுந்தது. விபத்தில் உயிர் தப்பினார். பெட்ரோல் குண்டு சத்தம் கேட்டு அந்த தெருவில் இருந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அமுதா டி.பி.சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

அந்த பகுதியில் கஞ்சா புகைத்த வாலிபர்களை கண்டித்ததால் தன்னை கொல்ல இந்த சம்பவம் நடந்ததாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் குண்டை வீசிய 3 வாலிபர்களும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
சந்தோஷ் (24), மனோஜ்குமார் (20) உள்பட 3 பேர் அதே மரத்தின் முன் பகுதியில் இருந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது.

அமுதா அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தோஷை கைது செய்தனர். பழிவாங்கும் நோக்கில் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த சந்தோஷின் நண்பர்கள் அமுதாவின் சொந்த சகோதரியின் கணவரை  தாக்கியுள்ளார்.அந்த வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தனர். அதன் பிறகும் அமுதாவின் குடும்பத்தின் மீதான கோபம் தீரவில்லை. இந்நிலையில் நேற்று இரவு நண்பருடன் சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web