பழிக்குப் பழி.. ஜெராக்ஸ் கடை ஓனரை கொல்ல முயன்ற 3 பேர் அதிரடியாக கைது!

 
சந்துரு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் வசிப்பவர் செல்வம். அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் இவர் மீது கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், குண்டர் சட்டத்தில் இரண்டு முறை சிறை சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்து அவரை வெட்ட முயன்றனர். ஆனால் அப்போது செல்வம் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

ஓட, ஓட வெட்டி கொலை

இதனிடையே ஆயுதம் ஏந்தியவர்களை கைது செய்யக் கோரி செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் கெங்குவார்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.அந்த வகையில் செல்வத்தின் கடை அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆயுதங்களுடன் வந்தவர்களை தேடினர். இந்நிலையில், செல்வத்தை தாக்க வந்த 9 பேரில் மூவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் காமக்காப்பட்டியை சேர்ந்த சந்துரு, புவனேஸ்வரன், ரோகித் என்பது தெரியவந்தது.

கைது

மேலும், கடந்த ஆண்டு கெங்குவார்பட்டி பகுதியில் ஜெகதீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடைய செல்வம் மற்றும் அவரது மகன் ரிஷாத்ராஜ் ஆகியோர் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வத்தை தாக்க வந்தவர்கள் இறந்த ஜெகதீஸ்வரனின் உறவினர்கள் என்றும், அவர்கள் யாரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் போலீசார் உறுதி செய்துள்ளனர். மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web