பழிக்குப் பழி.. இளம் ரவுடியை ஓட ஓட வெட்டி படுகொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!

 
ஸ்ரீராம்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (22). இவர் மங்களபுரத்தில் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ​​கடையின் முன் 6 மர்ம நபர்கள் பைக்கில் வந்தனர். அவர்களை பார்த்த ஸ்ரீராம் கடையை விட்டு வெளியே வந்து தப்பியோட முயன்றார். ஆனால் கடையில் இருந்து சில அடி தூரத்தில் மர்மநபர்கள் ஸ்ரீராமை சுற்றி வளைத்து கொடூரமாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரபரப்பான மருத்துவக்கல்லூரி சாலையில் நடந்த படுகொலையை பார்த்த பொதுமக்கள் பீதியில் அலறியடித்து ஓடினர்.

இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உயிர் போனதை உறுதி செய்த பின்னர், மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். ஸ்ரீராமின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்த எஸ்.பி., ஆஷிஷ் ராவத், டவுன் டி.எஸ்.பி., ராஜா, வல்லம் டி.எஸ்.பி., நித்யா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து, ஸ்ரீராமின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீராம் கொலை குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை பகுதியை சேர்ந்த பிரின்ஸ் லாரா (எ) சின்னா (28) என்பவர் கடந்த 2022ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் ஸ்ரீராம் உள்பட சிலரை வல்லம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில்,  ஸ்ரீராம் ஜாமீனில் வெளியே வந்தபோது கொலை செய்யப்பட்டார். அப்படியானால், பிரின்ஸ் லாரா கொலைக்கு பழிவாங்க ஸ்ரீராம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விசாரணையில் உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web