கலவரப்படுத்தும் கச்சா எண்ணை விலை.... கண்ணை கசக்கும் ஒபெக் நாடுகள்!

 
ஒபெக்

கச்சா எண்ணை தேவையின் அளவு சர்வதேச அளவில் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தாலும், கச்சா எண்ணையின் விலையில் முழுமையான உயர்வுத் தென்படவில்லை என்று எண்ணை சந்தை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணை விலை கடந்த மாதம் 12ம் தேதி ஒரு பேரல் 83 டாலர்களாக இருந்தது. ஆனால், திடீரென உலக அளவில் கச்சா எண்ணை நுகர்வில் தேக்கம் ஏற்பட்டதால், விலை கிடு கிடுவென வீழ்ச்சியடையத் தொடங்கியது. மே 3ம் தேதி நிலவரப்படி ஒரு பேரல் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணை விலை குறைந்தபட்சமாக 68 டாலர் 5 செண்டாக இருந்தது. மூன்று வார இடைவெளியில் எண்ணை விலையில் கிட்டத்தட்ட 15 டாலர்கள் வரை வீழ்ச்சியைக்கண்டது.

கச்சா எண்ணெய்

இதனால், பீதியடைந்த பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக், கச்சா எண்ணை உற்பத்தியை கிடுகிடுவென குறைக்கத் தொடங்கியது. எண்ணை உற்பத்தி குறைக்கப்பட்ட நிலையில், விலை சரிவு நிலை நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில் எண்ணை விலை மெல்ல உயரத்தொடங்கியது. நேற்று காலை சிங்கப்பூர் கச்சா எண்ணை சந்தையில் ஒரு பேரல் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணை 73 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 12ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது, விலை10 டாலர்கள் வரை குறைவாகவே உள்ளது.

எண்ணெய் கப்பல் துறைமுகம்

அதேபோல், பிரென்ட் ரக கச்சா எண்ணை கடந்த மாதம் 12ம் தேதி ஒரு பேரல் 87 டாலர்களாக இருந்தது. மே 3ம் தேதி 72 டாலர்களாக விலை சரிந்தது. இதன் பின்னர் மெல்ல விலை உயரத்தொடங்கியது. நேற்று காலை ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணை விலை 77 டாலர்களுக்கு விற்பனை செய் யப்பட்டது. மே 3ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும் போது எண்ணை விலை சராசரியாக 5 டாலர்கள் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த மாதம் 12ம் தேதி விலையுடன் ஒப்பிடும் போது, கச்சா எண்ணை விலை கிட்டத்தட்ட 10 டாலர்கள் வரை குறைவாகவே இருந்ததால், ஓபெக் நாடுகளின் கூட்டமைப்புகள் பெரும் கவலையில் உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web