நேபாளத்தில் வெடித்த கலவரம்... 2 பேர் பலி, 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
நேபாளம்
 


 
நேபாளத்தில்  மத்திய அரசு  பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு செப்டம்பர் 4ம் தேதி தடை விதித்தது. அதன்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உட்பட  பிரபலமான வலை தளங்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி  தடை விதிக்கப்பட்டது.  
இந்தத் தடையால், நேபாளத்தில் தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப தொடர்புகள் பாதிக்கப்பட்டன. இந்தத் தடைக்கு எதிராக, செப்டம்பர் 8ம் தேதி  காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக ‘ஜெனரேஷன் இசட்’ என அழைக்கப்படும் இளைய தலைமுறையினர், நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

இந்தப் பேரணி வன்முறையாக மாறியதால், காவல்துறை கண்ணீர்ப்புகை, ரப்பர் குண்டுகள் மற்றும் நீர்த்தாரை பீரங்கிகளைப் பயன்படுத்தியது. இந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காத்மாண்டுவில் பிற்பகல்  12:30 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டங்கள், சமூக வலைதளத் தடையுடன், அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் மையப்படுத்தியவை. இளைஞர்கள், இந்தத் தடையை பேச்சு சுதந்திரத்தை முடக்கும் முயற்சியாகவும், அரசுக்கு எதிரான விமர்சனங்களை அடக்குவதற்கான உத்தியாகவும் கருதுகின்றனர்.


நேபாளத்தில் உள்ள 3 கோடி மக்களில் 90 சதவீதத்துக்கும்  மேற்பட்டோர் சமூக வலைதளங்களை  பயன்படுத்துவதால், இந்தத் தடை நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே உருவான போராட்டங்களை அடக்குவதற்காக நேபாள இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், நேபாளத்தில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேபாளத்தில்  டிக்டாக், வைபர் போன்ற சில தளங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டு இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?