ரீல்ஸ் வெளியிட்டு இளைஞர் தற்கொலை... பதறிய நண்பர்கள்... இறுதியில் நடந்த சோகம்!

 
நவீன் குமார்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காத்தாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (20) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு கட்டுமான வேலையில் ஈடுபட்டார். நவீன்குமார் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார்.

அதோடு எங்கு சென்றாலும் ரீல்ஸ் எடுத்து அதனை பதிவிட்டு லைக்ஸ்களை பெறுவதில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நவீன்குமார் வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டுக்கு வந்த பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

நவீன் குமார்

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு குடியாத்தம் தாலுகா போலீசார் அனுப்பி வைத்தனர். நவீன் குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

நவீன் குமார்

இதனிடை மேலும், நவீன்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்துள்ளார். அத்துடன் இன்றைய தேதியிட்டு ஆர்பிஐ (RIP) என ரீல்ஸ் செய்து அதையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதன் பின் அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

 

From around the web