148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 23 சிக்ஸர்கள் அடித்து ரிஷப் பண்ட் சாதனை!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வரும் நிலையில் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர். பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கருண் நாயர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த கே.எல்.ராகுல் 55 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார். சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணி 38 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. சுப்மன் கில் 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
இந்த இன்னிங்சில் இதுவரை ரிஷப் பண்ட் 2 சிக்சர்கள் அடித்துள்ளார். இதனையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் மட்டும் அவர் இதுவரை 23 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு வெளிநாட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தென் ஆப்பிரிக்காவில் 21 சிக்சர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!