எகிறும் எதிர்பார்ப்பு... ஹாரிஸ் ஜெயராஜ் மகன் இசையமைப்பாளராக அறிமுகம்!
மெலடி பாடல்கள், ரொமான்ஸ் பாடல்கள் என்று இப்போதும் லூப் மோடில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் இசையமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
சாமுவேல் நிக்கோலஸ் நாயகனாக நடித்து, பாடிய தனியிசை பாடலான 'ஐயையோ' ஹிட்டடித்திருக்கும் நிலையில் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த பாடல் குறித்து பேசிய சாமுவேல் நிக்கோலஸ், "’ஏழாம் அறிவு’ படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், தந்தையின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும், பாடகராகவும் ஏற்கெனவே பணிபுரிந்திருக்கிறேன்.
'தேவ்' படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். தற்போது 'ஐயையோ' பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி" என்றார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!