எகிறும் எதிர்பார்ப்பு... நாளை நடிகர் தர்ஷனின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு!

 
தர்ஷன், ரேணுகாசாமி

 

ரசிகர் கொலையில் தர்ஷன் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தர்ஷன், ரேணுகாசாமி

சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

தர்ஷன், ரேணுகாசாமி

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?