எகிறும் எதிர்பார்ப்பு... தெறிக்க விடுவாரா தனுஷ்?! நாளை ராயன் இசை வெளியீட்டு விழா!

 
ராயன்

நாலை தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. மனைவியுடன் தகராறு, மிர்ச்சி சுசித்ரா சர்ச்சை பேட்டி, விவாகரத்து மனு என்று அடுத்தடுத்து சோர்வில் இருக்கும் நடிகர் தனுஷ், ராயன் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். கோலிவுட்டில் எந்த ஜோடி விவாகரத்து செய்தாலும் தனுஷ் பெயர் தொடர்ந்து அடிபட்டு வரும் நிலையில், தற்போது முழு மூச்சில் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பைத் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

 ராயன்
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே  களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மே 9-ம் தேதி இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தனுஷ் பாடிய ‘அடங்காத அசுரன்’ என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 ராயன்
இந்நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஜூலை 6-ம் தேதி சென்னையில்  தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராயன் படம் இம்மாதம் 26-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலு ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web