எகிறும் எதிர்பார்ப்பு... இன்று முதல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் விஜய்... திருச்சியில் திருவிழா!

 
தவெக தவெக

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட தொடங்கியிருக்கிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று செப்டம்பர் 13ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், திருச்சியில் தொடங்க உள்ளார். 

தவெக

உங்கள் விஜய் நா வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற வாசகங்களுடன் இலச்சினை வெளியிட்டுள்ளார். விஜய் பிரச்சாரத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து தவெக அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. இன்று காலை விஜய் விமானத்தில் திருச்சி வந்தடைகிறார்.

முதற்கட்ட பிரச்சார பயணத்தின் போது, சனிக்கிழமைகளில் மட்டும் சில நேரங்களில் ஞாயிற்றுக்கிழமை என 3 மாதங்களில் 16 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர்  மாவட்டங்களைத் தொடர்ந்து பயணத்தை மதுரையில் நிறைவு செய்கிறார்.

தவெக

திருச்சியில் பிரச்சாரத்துக்கு 23 கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடத்தப்படுகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?