ரிதன்யா தற்கொலை வழக்கு... மாமியார் ஜாமீன் மனுவும் தள்ளுபடி!

 
ரிதன்யா
 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர், மாமனாரைத் தொடர்ந்து மாமியாரின் ஜாமின் மனுமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரிதன்யா

இதில் கணவர், மாமனாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனு மீதான விசாரணையை 11-ந்தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.

திருப்பூர்

இதனை தொடர்ந்து, சித்ராதேவியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அந்த மனுவில் சித்ராதேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பும் விசாரணை நடந்தது. இதனை தொடர்ந்து, சித்ரா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?