கண்ணிமைக்கும் நேரத்தில் 18 சவரனை கொள்ளை.. சில்லறையை சிதறடித்து கம்பி நீட்டிய கில்லாடி பெண் கைது!

 
விமலா

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (40). இவர் கடந்த 23ம் தேதி கோவையில் இருந்து எம்.ஜி.ஆர்.க்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அசோக் நகர் அருகே பேருந்தில் வந்தபோது, அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் டிக்கெட் வாங்குவதற்காக தனது பண பர்ஸை எடுத்துள்ளார். அப்போது அவரது பர்ஸில் இருந்த காசுகள் கீழே விழுந்து சிதறின.

உடனே அருகில் அமர்ந்திருந்த ராஜலட்சுமி குனிந்து அந்த சில்லறைகளை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தார். அசோக் பில்லர் வந்ததும் அந்த பெண் இறங்க, அடுத்த பஸ் ஸ்டாப்பில் ராஜலட்சுமி இறங்கினாள். அப்போது தான் கையில் இருந்த நகை காணாமல் போனதை உணர்ந்தார். அதில் 18 சவரன் நகைகள் இருந்ததால் ராஜலட்சுமி அலறி துடித்தார்.

அப்போதுதான் தெரிந்தது, தன் அருகில் அமர்ந்திருந்த பெண் சில்லறையை சிதறடித்து  நகையை ஆட்டைய போட்டது. இதுகுறித்து ராஜலட்சுமி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இறங்கிய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகமடைந்த பஸ்சில் இருந்து இறங்கி மீண்டும் ஆட்டோவில் கோயம்பேடு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிசிடிவி காட்சிகளில் பதிவான பெண்ணின் புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த பிரபல பிக்பாக்கெட் ராணி விமலா (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இன்று காலை வேலூரில் பதுங்கியிருந்த விமலாவை தனிப்படை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா என பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய விமலா, சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டினாலும் போலீசாரிடம் சிக்காமல் தப்பியது தெரியவந்தது.

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மீது அரிப்பு பொடி தூவுவது, கவனத்தை திசை திருப்பி திருடுவது, சில்லறை சிதறி திருடுவது என பல வித்தைகளை தேர்ந்தெடுத்து குடும்பத்தை சேர்ந்த பிக்பாக்கெட் ராணி விமலா. விசாரணையில் விமலாவுக்கு திருமணமாகி 5 குழந்தைகள் இருப்பதும், கணவரின் குழந்தைகளை பராமரிப்பதற்காக திருட்டு தொழிலில் ஈடுபட்டு, அந்த வருமானத்தில் குடும்பத்துடன் உல்லாசமாக வாழ்ந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், சென்னையில் முகாமிட்டு, தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கைவரிசை காட்டினார். இதையடுத்து விமலாவிடம் இருந்து சில பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரது கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web