டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி.. துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீசார்..!

 
சாம்பார் மணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் புகுந்து இருவர் திருடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதிகாலையில் சாம்பார் மணி உள்ளிட்ட இரண்டு பேர் மதுபானங்களை திருடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சாம்பார் மணி

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, டாஸ்மாக் கடையில் புகுந்து கொள்ளையில் ஈடுபடுவது பிரபல கொள்ளையன் சாம்பார் மணி மற்றும் அவனது கூட்டாளி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இடத்தை போலீசார்  சுற்றி வளைத்தனர். பின்னர் சாம்பார் மணியை பிடிக்க முயன்ற போது, அவர் கத்தியால் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். 

அப்போது, போலீசார் தற்காப்புக்காக சாம்பார் மணியை காலில் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளிகளை பிடித்தனர். சுடப்பட்ட கொள்ளையன் சாம்பார் மணிக்கு தொடையில் குண்டு பாய்ந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனிடையே பிடிக்கும் முயற்சியின் போது காயமடைந்த இரண்டு காவலர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சாம்பார் மணி

அதிகாலை நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web