அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகை கொள்ளை... பெண் உட்பட 8 பேர் கைது!

 
நகை கொள்ளை
 

தூத்துக்குடி மாவட்டம் குலசேரகன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற கோவில் குலசை முத்தாரம்மன் கோவில்.  இந்தக் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் குமார்பட்டர். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள்.  குமாரின் வீடு கோவில் பின்புறம் கீழமலையான்தெருவில் அமைந்துள்ளது.  

நகை கொள்ளை
குமார் பட்டர்  ஜூன் 16ம் தேதி காலமானார். இதனையடுத்து அவரது  குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த சமயத்தில்  குலசேகரன்பட்டினத்திற்கு பிரியா வந்துள்ளார்.  வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 107 சவரன் நகை, வைரம், வெள்ளி நகை, விலையுயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  

உத்தரபிரதேச போலீஸ்

இதுகுறித்த புகாரின்பேரில்   போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?