125 சவரன் நகைகள் கொள்ளை... பிரசவத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மயிலாடுதுறை மாவட்டத்தில், சர்க்கரை ஆலை ஊழியர் மகளின் பிரசவத்திற்காக சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 125 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மங்கைமடம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது மகளின் பிரசவத்திற்காக மயிலாடுதுறைக்கு சென்ற செல்வேந்திரன் இன்று அதிகாலை வீடு திரும்பி உள்ளார்.
அப்போது வீடு திரும்பிய செல்வேந்திரனிற்கு பெரும் அதிர்ச்சியாக வீட்டின் பின்பக்க கதவு உடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டினுள் அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன.
இந்நிலையில் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 125 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்வேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் 125 சரவன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!