அதிர்ச்சி...ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் ரோபோ சங்கர்.இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் தீபாவளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.நீண்ட இடைவெளிக்குப் பின் 'மாரி' படத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'வேலைக்காரன்' படங்களில் இவரது நடிப்பு பெரும் பேசுபொருளாக அமைந்தது.
இவர் தற்போது, சில படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு தீவிர மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் உடல் எடை இழந்து மோசமான நிலையில் இருந்தார். தொடர் சிகிச்சை காரணமாக நோயிலிருந்து மீண்டு, பழைய தோற்றத்திற்கு மாறினார்.

இந்நிலையில், ரோபோ சங்கருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
