கடலில் ரோஹிங்கயா அகதி படகு கவிழ்ந்து விபத்து... 21 பேர் பலி!
மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கயா அகதிகள் மலேசியாவை நோக்கிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேரின் உடல்கள் மலேசியா கடற்கரையிலும், 9 பேரின் உடல்கள் தாய்லாந்து கடற்கரையிலும் மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் அமைப்பின் பிராந்திய தலைவர் ரொமில் முஸ்தஃபா தெரிவித்துள்ளார். மேலும், 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

“பாதுகாப்பு அங்கி இல்லாமல் கடலில் மூழ்கியவர்களின் உயிர் பிழைப்புக் கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. இருந்தாலும், மிதக்கும் பொருள்களைப் பற்றிக்கொண்டு யாராவது உயிருடன் தப்பியிருக்கிறார்களா என்பதைத் தேடி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
வங்கதேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு தஞ்சம் தேடி வரும் ரோஹிங்கயா அகதிகள், ஆபத்தான கடல் வழிகளைத் தேர்வு செய்வது வழக்கம். சமீபத்தில் இரண்டு படகுகளில் மொத்தம் 300-க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டதாகவும், அதில் 70 பேரை ஏற்றிச் சென்ற சிறிய படகே கவிழ்ந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இன்னும் 230 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகின் நிலை குறித்து தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
