கெத்து... உலக காவல்துறை வரலாற்றில் முதன் முறையாக போலீசுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!

 
ரோல்ஸ் ராய்ஸ்

 உலக அளவில் சொகுசு கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இதனை காவல்துறை வாகனமாக மியாமி பயன்படுத்த தொடங்கியுள்ளது கார் பிரியர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது  மியாமி நகரம். இந்த மியாமியின் காவல்துறையை மேம்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மியாமி காவல்துறைக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர்களின் காவல் வாகனமாக கொடுத்து அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.


இது குறித்த  வீடியோவை மியாமி காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இதுவரை  இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. பலர் மக்களின் பணத்தை அரசு இது போன்று வீண் செலவு செய்கிறது என தெரிவித்துள்ளனர்.  இது குறித்து சில நெட்டிசன்கள் பார்க்கிங் டிக்கெட்டில் நாங்கள் செலுத்தும் பணத்தை வைத்து இதைத்தான் செய்கிறீர்கள் என கருத்து பதிவிட்டுள்ளனர். சிலர் என்னால் இதை நம்பவே முடியவில்லை என்கின்றனர். மேலும் சிலர் அருமையான வேலை. இந்தமாதிரி செயல்கள்தான் நமது நகரத்தை வேறு இடத்திற்கு கொண்டுசெல்கின்றன. இதை நினைத்து பெருமைப்படுகின்றேன் எனக் கூறியுள்ளனர்.  
பணத்தை செலவழிக்க வேறு வழி இல்லாததுபோல் இப்படி வீணடிக்கிறார்கள். இதற்கு பதில் சாலையோரங்களில் இருப்பவர்களுக்கு உதவலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web