சூப்பர்... சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை!

 
சிக்னல் மேற்கூரை

 தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பித்தது முதல் அனல்காற்று மக்களை வாட்டி வதைக்கிறது. வாகன ஓட்டிகள் பாடு படு திண்டாட்டம் தான். இருசக்கர வாகன ஓட்டிகளை கேட்கவே வேண்டாம். பரிதாபமாக வண்டிகளை ஓட்டி செல்வதை பார்த்தால் கண்களில் கண்ணீர் அல்ல ரத்தமே வடியும் எனும் அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

சிக்னல் மேற்கூரை

இதற்கு தீர்வு காணும் வகையில் சிக்னல்களில்  வெயிலிலிருந்து வாகன ஓட்டிகளை சற்றே இளைப்பாற வைக்க தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  ஈரோடு மாவட்டத்தில் தான் தமிழகத்திலேயே அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.

ரூ.100 வரை சுங்கக் கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

 
அதை முன்மாதிரியாக கொண்டு ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் தற்போது பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இதுபோன்ற பச்சை திரை கொண்ட மேற்கூரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்கள் அனைத்திலும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2 நிமிடம் சிக்னலில் வாகன ஓட்டிகள் இளைப்பாற  வாகன ஓட்டிகள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த ஏற்பாட்டுக்கு வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web