கனமழை... மதுரையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி!

 
மேற்கூரை

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மதுரை வைகையாற்றை ஒட்டியுள்ள மதிச்சியம் சப்பாணி கோவில் தெரு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியன் (47) என்பவர் நேற்றிரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென மழை காரணமாக வீட்டின் மேலே இருந்த கான்கிரிட் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.  இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மீது சுவர் விழுந்தது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் வீட்டில் உள்ளவர்கள் மதிச்சியம் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு அந்த காவல்துறையினர்  பாலசுப்ரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று சுவர் இடிந்து  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!