ரோப்கார் சேவை இரு நாட்களுக்கு நிறுத்தம்!
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்த புனித தலமாகும். அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்கு படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை முக்கிய வழிகளாக உள்ளன. இதனுடன், பக்தர்கள் எளிதில் மலைக்கோவிலுக்கு சென்றுவர மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் சேவைகளும் இயங்கி வருகின்றன. குறிப்பாக, ரோப்கார் வழியாக செல்லும் போது மலையின் இயற்கை அழகை ரசிக்க முடிவதால், இதை பயன்படுத்தும் பக்தர்கள் அதிகமாக உள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்தும் வகையில், பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். பராமரிப்பு காலங்களில் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். அதன்படி, தற்போது நடைபெறும் பராமரிப்பு பணிகளினால் இன்று மற்றும் நாளை ரோப்கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மின்இழுவை ரயில் அல்லது படிப்பாதையைப் பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் ரோப்கார் சேவை வழக்கம்போல் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
