பழனியில் ஜூலை 15 முதல் ரோப்கார் சேவை நிறுத்தம்!
தமிழகத்தின் முருகனின் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்றது திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலை மீது அமைந்துள்ள இந்த மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப் கார், மின் இழுவை ரயில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் ரோப் காரில் 3 நிமிடங்களில் மலைக்கோயிலை அடையலாம்.

இதனால் ரோப் காரில் அதிக அளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு மாதமும் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சமயத்தில் ரோப் காரை இயக்கும் மோட்டார், பற் சக்கரங்கள், ஷாப்டுகள் என அனைத்து பாகங்களும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படும்.

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் ஒரு மாதத்துக்கு செயல்படாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 15 முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் செயல்படாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் வின்ச் ரயில், படிப் பாதை மற்றும் யானைப் பாதையை பயன்படுத்தி மலைக் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
