நாளை இரவு வரை 4 மாவட்டங்களுக்கு ” கள்ளக்கடல் “ எச்சரிக்கை!

 
தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை
 தமிழகத்தில் 4 கடலோர மாவட்டங்களில் கள்ளக்கடல் எனப்படும் திடீர் கடல் சீற்றம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில்  கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 கடலோர மாவட்டங்களுக்கு நாளை இரவு 11:30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4  மாவட்ட கடற்கரைகளில் அலை அதிக உயரம் எழும்பக்கூடும் எனவும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடல் லேசான சீற்றத்தோடு காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
 

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை

 தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் கேரளாவின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்  தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கடல் சீற்றத்துக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலைஓசையுடன் அமைதியாக காணப்படும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் ஏற்படுத்தும் பாதிப்பையே  `கள்ளக்கடல்' நிகழ்வு என்கின்றனர்.  கடந்த சில  வாரங்களுக்கு முன் இதேபோல தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!